ஜெயலலிதாவுக்கு உயிர் பிரிந்தது எப்போது, எம்பாமிங் பண்ணும்போது கால்கள் இருந்ததா என்று அரசு டாக்டரிடம் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்ததாக கூறப்பட்டது. டிசம்பர் 6ஆம் தேதி அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் உடலை பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. காரணம், பொலிவுடன் இருந்தது ஜெயலலிதாவின் முகம். இதற்குக் காரணம் அவரது கன்னத்தில் காணப்பட்ட 4 புள்ளிகள்தானாம். எம்பாமிங் முறையில் அவரது உடல் பதப்படுத்தப்பட்டது
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் கால்கள் நீக்கப்பட்டதாகவும் அதனால் தான் அவருடைய உடல் எம்பாமிங் பண்ணப்பட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவியது. பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.