ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் எதிர்ப்போம் சீமான் அறிவிப்பு

Oneindia Tamil 2017-12-31

Views 1

ஜினி அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்த்து கடுமையான அரசியல் செய்வோம் என்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது : தமிழ்நாட்டில் மட்டும் தான் எல்லா ஜனநாயகமும் பேசுவார்கள், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று என் தேசத்தில் மட்டும் தான் சொல்வார்கள். காவிரிப் பிரச்னையின் போது சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகள் போல விரட்டியடிக்கப்பட்டார்களே அப்போது எங்கே போனார் இவர். பேருத்துகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, ஆண்களும், பெண்களும் தாக்கப்பட்டனர். அப்போது ஒரே நாடு ஒரே தேசத்தில் ஏன் மக்களை அடித்து விரட்டுகிறார்கள் என்று யாரும் கேட்கவில்லையே ஏன்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம். ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது மக்களிடம் கொண்டு செல்ல, அவர் என்ன சொல்கிறார் சிஸ்டம் சரியில்லை என்கிறார். சிஸ்டம் என்றால் அமைப்பு, அதைத் தான் நாங்களும் அமைப்பு சரியில்லை, எந்தெந்த அமைப்பு சரியில்லை என்று சொல்லி வருகிறோம். அதே போல ரஜினியும் அவர் எந்த சிஸ்டம் சரியில்லை என்று தெளிவாக சொல்ல வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

Naamtamizhar party organiser Seeman told to reporters at Chennai that will do politics against of Rajinikanth, and criticised that Rajini has no cclear policies till now

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS