எங்கள் ஆட்சியில் சிஸ்டம் சரியாகவே உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்து இருக்கிறார். ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி இன்று கடைசி நாளாக தனது ரசிகர்களை சந்தித்தார். ரஜினி ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து கொண்டு இருந்த அறிவிப்பை ரஜினி வெளியிட்டுவிட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சியுடன் போட்டியிடுவேன் என்று ரஜினி அறிவித்து இருக்கிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் இருந்து இதற்காக தீவிரமாக உழைப்பேன் என்றும் கூறியுள்ளார். இதில் பேசிய ரஜினி, தமிழ்நாட்டு அரசியலில் சிஸ்டம் சரியில்லை என்று கூறினார். இந்த அரசியல் சிஸ்டத்தை சரியாக்க நாம் உழைக்க வேண்டும் என்றும் அவர் பேசினார். தற்போது இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ''தமிழக அரசின் சிஸ்டத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை'' என்று கூறியுள்ளார். மேலும் ''எங்கள் அரசில் சிஸ்டம் மிகவும் நன்றாகவே செயல்படுகிறது. எந்த சிஸ்டத்தில் பிரச்சனை என்று கூறுங்கள். தவறான சிஸ்டத்தை சரி செய்து மாற்றிக் கொள்கிறோம்'' என்று பேட்டியில் கூறியுள்ளார்.
எங்கள் ஆட்சியில் சிஸ்டம் சரியாகவே உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்து இருக்கிறார். ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி இன்று கடைசி நாளாக தனது ரசிகர்களை சந்தித்தார். ரஜினி ரசிகர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து கொண்டு இருந்த அறிவிப்பை ரஜினி வெளியிட்டுவிட்டார்.
Rajini says thet Tamilnadu political system in not good. ADMK Minister Sellur Raju replies to Rajini speech on political system.