சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தங்கள் ஆக்ஷன் அவதாரத்தை காட்டி உள்ளனர்.
நடந்து முடிந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை தோற்கடித்து உள்ளார். இதனால் அதிமுகவில் மீண்டும் அணித்தாவல் படலம் ஆரம்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இன்று நடந்த அவசர உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் இதுநாள் வரை கடைபிடித்து வந்த அமைதியை விடுத்து தங்களது ஆக்ஷன் அவதாரத்தை எடுத்து உள்ளனர். இதனால், கட்சி நிர்வாகிகள் என்ன செய்யலாம் என்று யோசித்து வருகின்றனர்.உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை; உள்ளே இருந்துகொண்டு உள்ளடி வேலைகளை பார்ப்பவர்களுக்கு இங்கு இடமில்லை என்று கூட்டறிக்கை கொடுத்த சிறுது நேரத்திலேயே கட்சி நிர்வாகிகள் தங்க தமிழ்செல்வன், பாப்புலர் முத்தையா, வெற்றிவேல், புகழேந்தி , சி.ஆர்.சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 9 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன் எதோ மாயாஜாலம் செய்து வெற்றி பெற்று உள்ளார். அடிமட்டத்தில் உள்ள உண்மையான கட்சி தொண்டன் கூட ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டு இருக்கமாட்டான். ஆனால், தங்கள் சுயநலத்திற்காக வீடியோ வெளியிட்டவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டார். மேலும், இனி கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்தார்.
OPS and EPS faction of ADMK expelled 9 Members from the party today. They also said there is no place here for traitors soon TTV Dinakaran will show his original face to his followers.