வாக்கு மையத்தில் களேபரம் ..வீடியோ

Oneindia Tamil 2017-12-24

Views 370

ஆர் கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எண்ணப்பட்டது. திமுக சார்பில் மருது கணேஷ் அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு நாகராஜன் சுயேட்சையாக டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். கடந்த 21ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. வாக்குபெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் இராணிமேரி கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முழுவதும் வீடியோ பதிவுகள் செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கடும் கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டது. அடையாள அட்டை இருக்கும் வேட்பாளர்களின் முகவர்கள், அலுவலர்கள், செய்தியாளர்கள் மட்டுமே அனுமதியளிக்கப்பட்டனர்.

ஆர்கே நகரில் மொத்தம் 1,76,885 பேர் வாக்களித்துள்ளனர். முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது. முதல் சுற்றில் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்பட்டது. மத்திய தேர்தல் நுண்பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்தே பிரதான கட்சி வேட்பாளர்களை விட சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் முன்னிலை வகித்தார். அதிமுக திமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி விட்டு டிடிவி தினகரன் முன்னிலை வகித்ததை அவரது ஆதவாளர்கள் கல்லூரிக்கு வெளியில் நின்று உற்சாக கொண்டாட்டம் போட்டனர். அப்போது ஓபிஎஸ் இபிஎஸ் மற்றும் தினகரன் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டது . இதனால் வாக்கு எண்ணிக்கை அரைமணிநேரம் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் எண்ணப்பட்டது .

Des : Vote in the polling station .. The RK Nagar mid-term count was counted this morning. On behalf of the DMK, Marudu Ganesh is the AIADMK candidate for Madhusudhanan, BJP's Karu Nagarajan Independent, TDV Dinakaran and 59 other candidates. Polling was held on 21st. Votes were brought to the Queen Mary College with strong security. The vote count started at 8 am this morning. The vote count was 19 rounds

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS