முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்றிருப்பது அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்ற வருகிறது. சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
டிடிவி தினகரன் 412 வாக்குகள் பெற்றுள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார் டிடிவி தினகரன். அவர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் முதல் சுற்றிலேயே அதிமுக திமுகவை முந்தி தினகரன் முன்னிலை வகிப்பது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக, தினகரன் அணி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.
RK Nagar poll counting starts, TTV Dinakaran leading in first round of counting.