முதல் சுற்றிலேயே முந்திய தினகரன்... ஹேப்பி மோடில் ஆதரவாளர்கள்!- வீடியோ

Oneindia Tamil 2017-12-24

Views 2

ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன், முதல் சுற்று முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடத்திருப்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவா, அல்லது அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட தினகரனுக்கா மக்களின் ஆதரவு என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இருந்து வருகிறது. ஆளும் கட்சி ரூ. 120 கோடி வரை பணப்பட்டுவாடா செய்ததாக தினகரன் குற்றம் சாட்டினார்.தினகரன் தரப்பு நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்ததாக பாஜக குற்றம் சாட்டியது. இதோடு பலருக்கு தினகரனின் சின்னமான குக்கர் பரிசாக அளிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இன்றைய தேர்தல் முடிவுகளுமே முதல் சுற்றில் தினகரன் ஏறத்தாழ 3 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது.

இதனிடையே ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் ஆர்கேநகர் முதல் சுற்று முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பதை காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


தனக்கு குக்கர் சின்னம் அளிக்கப்பட்ட இரண்டே வாரத்தில் அதை மக்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாக்கி இருக்கிறார் டிடிவி தினகரன். முதல் மூன்று நாட்கள் சரியாக பிரச்சாரம் செய்ய முடியாமல் போனாலும் கூட அவர் குக்கர் சின்னத்தை மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சேர்த்து இருக்கிறார்.

பல கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களது லோகோவை மாற்றிவிட்டு அதை எப்படி மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருக்கின்றனர். ஏன் கூகுள் கூட தனது லோகோவை மாற்றிய போது இதுகுறித்து பெரிய விவாதங்கள் எழுந்தது.

BJP state president Tamilisai soundarrajan tweets that first round results shows the votes were saled and the ccandidate succeded in it.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS