2017ல் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த போன் எது தெரியுமா ?- வீடியோ

Oneindia Tamil 2017-12-22

Views 2.2K

கூகுளில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் எது என்ற பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. மக்கள் அதிகமாக விரும்பி எந்த போனை தேடினார்கள் என்பதும், எந்த போனை ஆர்டர் செய்தார்கள் என்பது இந்த பட்டியலில் கருத்தில் கொள்ளப்பட்டு இருக்கிறது. 2016ல் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் என்று வெளிவந்த 'பிரீடம் 251' முதல் இடம் பிடித்து இருந்தது. இந்த வருடம் அந்த போன் இல்லாததால் அந்த இடத்தை மற்றொரு போன் ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த வருடம் அதிக பேமஸ் ஆனா ஓப்போ, ஒன் பிளஸ், வீவோ போன்ற போன்கள் முதல் பத்து இடத்திற்குள் வந்தாலும், முதல் ஐந்து இடத்திற்குள் இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இந்த பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு போன் இடம்பிடித்து இருக்கிறது.

'ரேசர் போன்' என்ற ஸ்மார்ட் போன்தான் இந்த பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்து இருக்கிறது. கடந்த மாதம் நவம்பர் 15ம் தேதிதான் இந்த போன் சந்தைக்கு வந்தது. இந்த போன் முழுக்க முழுக்க கேம் விளையாடும் பயனாளிகளை குறிவைத்து உருவாக்கப்பட்டது. ஆனாலும் இந்த போன் தினசரி உபயோகிக்க நன்றாக இருப்பதால் பலரும் இதுகுறித்து தேடினார்கள்.

என்னதான் பல வித்தியாசமான போன்கள் வந்தாலும் நோக்கியா மாதிரி வராது என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே நோக்கியா இந்த தேடலில் உலக அளவில் 4 வது இடம் பிடித்து இருக்கிறது.

List of most searched smart phone in Google in 2017 has been released. In this list iPhone 8 lists in first. iPhone X, Samsung Galaxy S8, Nokia 3310, Razer Phone in the list.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS