குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்த இடங்களில் 12 தொகுதிகளில் பாஜக தோல்வியைத் தழுவியிருக்கிறது. 4 முறை, 5 முறை எம்.எல்.ஏவாக இருந்த பாஜக தலைவர்களும் தோல்வியைத் தழுவியவர்களில் அடக்கம். குஜராத் சட்டசபை தேர்தலில் முழு வீச்சில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். ஒருநாட்டின் பிரதமர் என்ற பதவியில் இருந்த போதும் கூட குஜராத் தேர்தலை சொந்த பிரச்சனையாகவே பார்த்தார் மோடி.
குஜராத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி அனல் பறக்கும் பிரசாரங்களை மேற்கொண்டார். ஆனால் பிரதமர் மோடி பிரசாரம் செய்த பகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்கிறது அகமதாபாத் மிர்ரர் ஊடகம்.
இது தொடர்பாக அகமதாபாத் மிர்ரர் ஊடகம் எழுதியுள்ளதாவது: அமைச்சர்களாக இருந்த சங்கர் சவுத்ரி, ஜாஷா பரத் ஆகியோர் வாவ் மற்றும் சோம்நாத் தொகுதிகளில் தோற்றுப் போனார்கள். இந்த தொகுதிகளில் பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார்.
The Congress got 12 seats where PM Narendra Modi conducted public rallies during the poll campaign.