உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய கொள்ளையன்- வீடியோ

Oneindia Tamil 2017-12-18

Views 812

செல் போன் திருடன் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தி விட்டு தானும் குத்திகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அமைந்தகரையில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பனி ஆற்றி வருபவர் சீனிவாசன் இவர் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பிரபல செல்போன் திருடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தான் அவனை பார்த்ததும் சீனிவாசன் பைக்கை நிறுத்திவிட்டு விரட்டி பிடிக்க முயன்றுள்ளார் எஸ் ஐ தன்னை பிடிக்க வருவதை கண்ட கொள்ளையன் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசனின் வயிறில் இரண்டு முறை குத்தியுள்ளான் .இதனால் சீனிவாசன் மயக்கமடைந்து சம்பவ இடத்திலேய உயிருக்கு போராடிய நிலையில் துடி துடித்து கொண்டிருந்தார் . எஸ் ஐ சீனிவாசன் துடி துடித்து இருந்ததை கண்ட பொதுமக்கள் அவரை உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுபிவைத்தனர் .தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ் ஐ சீனிவாசன் இறந்து விடுவாரே என்ற பயத்தில் கொள்ளையன் அதே கதியில் தன் வயிற்றில் சதக் சதக் என்று நாண்கு முறை குத்திகொண்டான் . இதில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட அவனும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டான் .எஸ் ஐ மற்றும் கொள்ளையனும் கத்தி குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS