சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படம் வரும் 22-ம் தேதி வெளிவருகிறது. நயன்தாரா, ஃபகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். மோகன்ராஜா இயக்கி உள்ளார். 'வேலைக்காரன்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், மூன்று விதமான கெட்-அப்களில் நடித்துள்ளார். இதுகுறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறியிருக்கிறார்.
"சென்னை வெள்ளத்தின் போது வேலைக்காரன் படத்தின் ஒரு வரிக்கதையை எனக்கு சொன்னார் மோகன் ராஜா. அவர் சொன்ன அந்த கான்செப்ட் என்னை கவர்ந்தது. இந்தப் படம் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரிடம் உறுதி அளித்தேன். வேலைக்காரன் வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா, வருங்கால தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான படம். இதுவரை சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படத்தில் நடித்ததில்லை. இந்தப் படத்தில் அவரின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். அவர் மூன்று விதமான பரிணாமங்களில் தோன்றுவார். அதற்கேற்ப அவரின் தோற்றத்தையும் காட்சிகளையும் உருவாக்கினோம்" எனக் கூறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.
Sivakarthikeyan starring 'Velaikkaran' will be released on the 22nd December. Nayanthara, Fahad fasil, Prakash Raj, Sneha and others are in the cast. Anirudh has composed music. Recently, the songs of 'Velaikkaran' have been released. "Sivakarthikeyan in this film has acted in three different get-ups, and accordingly we created his appearance and scenes," said cinematographer Ramji.