ராகுல் காந்தியை பாராட்டி தலையங்கம் வெளியிட்ட சிவா சேனா- வீடியோ

Oneindia Tamil 2017-12-18

Views 2.3K

குஜராத்தில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடுமையான டஃப் கொடுத்ததாக ராகுல்காந்தியை சிவ சேனா கட்சி புகழ்ந்து தள்ளியுள்ளது. குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டசபைகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதன்படி இருமாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி இரு மாநிலங்களிலும் கடும் போட்டி கொடுத்தது.

தொடக்கத்தில் முன்னிலை வகித்த பாஜக போக போக காங்கிரஸுடன் சமநிலைக்கு வந்து போட்டி போட்டது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் பாஜகவை முந்தியது.
இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இருப்பினும் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
குஜராத் மற்றும் ஹிமாச்சலில் ஆட்சியமைக்கவுள்ள பாஜகவுக்கு அக்கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா, காங்கிரஸ் கடுமையான போட்டி கொடுத்ததாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்துள்ளது.

Shiv Sena praises Rahul gandhi for given tough to BJP in two state assembly elections. Congress gave tough competion in the Gujarat and Himachal assembly polls.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS