மதில் மேல் பூனையாக பாஜக... எக்ஸிட் போல் முடிவுகள் என்ன சொல்கின்றன ?

Oneindia Tamil 2017-12-14

Views 8.5K

குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக, இன்று வெளியான அனைத்து டிவி சேனல்களின் எக்சிட் போல்களும் பாஜகவே இரு மாநிலங்களிலும் வெல்லும் என கூறியுள்ளன. வரும் 18ம் தேதி, திங்கள்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இப்போது வெளியாகியுள்ள இந்த எக்சிட் போல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏறத்தாழ இவை மக்களின் மன நிலையை பிரதிபலிப்பதாகவே இருக்கும் என அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.

அதேநேரம், மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில், பாஜக நினைத்த அளவுக்கு, அல்லது அது திட்டமிட்ட அளவுக்கு வெற்றி பெற முடியாது என்பதும் இந்த எக்சிட் போல் உணர்த்தும் பாடம்.
பாஜக தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் குஜராத்தில் 150 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெல்லும் என சவால்விடும் தொனியில் பிரசாரம் செய்திருந்தனர். ஆனால் இதுவரை வெளியான எந்த ஒரு மீடியாவின் எக்சிட் போலிலும் அந்த அளவுக்கு இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கும் என சொல்லப்படவில்லை.

Most surveys predict an easy win for BJP in Gujarat, however, the party may miss its 150 seat target.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS