கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி அனுஷ்காவுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு, பாட்டு பாடி இம்பிரஸ் செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். 2 மாதங்களாக ரகசியமாக திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.
அவர்களின் திருமணம் பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மெஹந்தி நிகழ்ச்சி நடந்தபோது அனுஷ்காவின் இரண்டு கைகளிலும் மெஹந்தி வைத்திருந்தார்கள். இதை பார்த்த கோஹ்லி அவருக்கு சாப்பாட்டு ஊட்டிவிட்டார். கோலி மேரே மெஹ்பூப் என்ற இந்தி பாடலை அனைவர் முன்பும் பாடி அனுஷ்காவை அசத்தினார். கோஹ்லி பாடியதை கேட்டு உறவினர்கள் அனைவரும் உற்சாக கரகோஷமிட்டனர். அனுஷ்காவை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காக பாடுபட்டு ஒருவழியாக மணந்துள்ளார் கோஹ்லி. அனுஷ்காவுக்காக டெல்லியில் இருந்து மும்பைக்கு குடிபெயர்கிறார் கோஹ்லி. திருமணமாகிவிட்டதால் வீட்டில் இனி அனுஷ்கா தான் கேப்டன், கோஹ்லி துணை கேப்டன் என்று தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகரும், நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக்.
Cricketer Virat Kohli has fed Anushka Sharma during Mehendi ceremony. He even sang Mere Mehboob song for his girl. Kohli is giving plenty of husband goals.