டிவி9 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின்போது நடிகை ரோஜா, தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாரிசு அரசியல் பற்றி டிவி 9 தொலைக்காட்சி சேனலில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ரஜினிகாந்த் என்பவர் தொகுத்து வழங்கினார். நடிகர் பவன் கல்யாண் அரசியல் தலைவராக தகுதியானவரா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. டோலிவுட் தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் தனக்கு பிடித்த நடிகரான பவன் கல்யாணுக்கு ஆதரவாக பேசினார்.
செல்போன் மூலம் நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரோஜாவிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் பவன் கல்யாணை அவன், இவன் என்று மரியாதை இல்லாமல் பேசினார். இதை கேட்டு கோபம் அடைந்த கணேஷ் மரியாதையாக பேசுங்கள் என்றார்.
நீங்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் சேர்ந்த ராசி தான் ராஜசேகர ரெட்டி இறந்துவிட்டார். அதே கட்சியில் தொடர்ந்து இருங்கள். உங்கள் ராசி பற்றி நாட்டுக்கே தெரியும் என்று கணேஷ் ரோஜாவிடம் கூறினார்.
YSR congress MLA Roja and Tollywood producer Bandla Ganesh verbally abused each other in a television debate programme about dynasty politics. Both of them threatened to break each other's teeeth.