கல்யாணமான நாளில் இருந்தே சண்டை சச்சரவா இருக்கே? இத்தனை வருஷம் ஆச்சு ஒரு குழந்தை இல்லையே என்று ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போவார்கள். அவர்களுக்கு குரு எங்கே நின்றிக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
தனித்த குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த உள்ள வீட்டின் ஸ்தானத்தை கெடுத்து விடும். அதை வைத்துத்தான் 'குரு நின்ற இடம் பாழ்' என்கின்றனர் ஜோதிடர்கள். குரு பகவான் பார்த்தால் கோடி நன்மை என்று கூறுகிறார்கள்.எத்தனை பணமிருந்தும் புகழிருந்தும் என்ன வீட்ல நிம்மதியில்லையே என்று புலம்புவார்கள். கணவன் மனைவி இடையே சந்தோசமில்லை... அம்மா, அப்பா என்று கூப்பிட மழலை செல்வமில்லை என்று புலம்புவார்கள். இதற்கெல்லாம் உங்கள் ஜாதகத்தில் குருபகவான் எங்கே எப்படியிருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
சுப கிரகமான குருவிற்கு சில அசுப அமைப்புகளும் உண்டு. குரு பார்வை தான் யோகம், தோஷ நிவர்த்தி போன்ற ஏற்றமான பலன்களைத் தரும். ஏழாம் இடத்தில் தனித்த குரு இருந்தால்,தனித்த சுக்கிரன் இருந்தால் சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் திருமண வாழ்வை கசப்பாக்கி விடுகிறார். குரு எங்கே எப்படியிருந்தால் என்ன நடக்கும் பார்க்கலாம்.
குருபகவான் லக்னத்தில் தனித்து இருந்தால் பல்வேறு வகையான சிக்கல்கள் உண்டாகும். மிகப் பெரிய குழப்பவாதியாக ஜாதகரை உருவாக்குவார். சுயமுடிவு செய்யும் தன்மையை இழக்க வைப்பார். லக்னத்தில் குரு இருப்பது மற்றொரு வகையில் மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு விழும். ஆகையால் இந்த இடங்களின் பலம் விருத்தியாகும்.
லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு தனித்து இருந்தால் பேச்சில் தடுமாற்றம் இருக்கும். திக்குவாய் கோளாறு ஏற்படலாம். குடும்பத்தில் ஏதாவது வாக்கு வாதங்கள் இருக்கும். பணத்தட்டுப்பாடு இருக்கும். அல்லது வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும்.
Jupiter in seventh house of horoscope makes a person scholar and fortunate. He is a good speaker and gets more benefits in foreign countries.
Dreamy Flashback Kevin MacLeod (incompetech.com)
Licensed under Creative Commons: By Attribution 3.0 License
http://creativecommons.org/licenses/by/3.0/
Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: https://incompetech.com/music/royalty...