பரோல்ன்னா.. ஷாப்பிங்கா? அரசியலை கொண்டு வந்து எங்க வச்சாங்க பாருங்க ராதிகா!..வீடியோ

Oneindia Tamil 2017-11-14

Views 3.6K

உடல்நலம் இல்லாமல் இருக்கும் கணவரை பார்க்க பரோலில் வந்த அக்கா வாணியைப் பார்த்து பரோல்னா ஷாப்பிங் போறதாக்கா என்று அப்பாவியாய் கேட்டார் தங்கை ராணி. பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா அவ்வப்போது ஷாப்பிங் சென்று வந்தார். இது பற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியானது. சமீபத்தில் கணவர் நடராஜனைப் பார்க்க பரோலில் வெளியே வந்தார் சசிகலா. இந்த இரண்டையும் கோர்த்து விட்டு வாணி ராணி சீரியலில் சீன் வைத்து டயலாக் வைத்து விட்டார்கள்.

சித்தி சீரியரில் தொடங்கி வாணி ராணி வரை இரவு 9.30 மணிக்கு அனைவரின் வீட்டு வரவேற்பரையிலும் ஆஜராகி விடுகிறார் ராதிகா. இல்லத்தரசிகள் மத்தியில் ராதிகாவிற்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்
சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘வாணி ராணி' சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்,
இந்த சீரியல் 1500 எபிசோடுகளை எட்டிப்பிடிக்கப் போகிறது. குடும்ப சீரியல் என தொடங்கி மாமியார் மருமகள் வில்லத்தனம், கள்ளநோட்டு, வருமான வரி சோதனை என பல சீன்கள் வைக்கப்பட்டுள்ளன.

Vani Rani Serial will end after 2 months. Rathika's Vani Rani serial telecast on SunTV daily 9.30 PM

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS