அதான் எல்லாம் "வேலையும்" முடிஞ்சிருச்சே!.. எப்ப அறிவிக்க போறீங்க தலைவா?- வீடியோ

Oneindia Tamil 2017-12-11

Views 11.4K

கட்சி கொடி, கட்சியின் சின்னம், பெயர் என அனைத்தும் முடிவடைந்து விட்டபோதிலும் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.

ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசை. ஆனால் அவரோ அதுகுறித்து எந்த வித சிக்னலும் காட்டாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசிய பேச்சிலிருந்து அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. மேலும் அவரது சகோதரர் சத்திய நாராயண ராவும், நண்பர் ராஜ்பகதூரும் இதையே உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் ரஜினி தனது பிறந்தநாளில் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம் எப்போது களத்தில் இறங்கி வேலை செய்ய போறீங்க என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவரோ இப்ப அவசியம் இல்லைங்க என்று கூறிவிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு, அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்ற கருத்து நிலவி வந்தது. எனினும் ரசிகர்கள் மனம்தளராமல் இப்ப அவசியம் இல்லேனு தானே சொன்னார், வரமாட்டேனு சொல்லலையே என்ற எண்ணத்துடன் அவரது அறிவிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

Tomorrow is Rajinikanth's birthday. As the political party's name, flag, everything was already decided, then When will he announces his political entry?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS