விரைவில் அடுத்தகட்ட அரசியல் நகர்வை அறிவிப்பேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் வேட்புமனு நீண்ட இழுபறிக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டது.
இரவு வரை நீடித்த இந்த குழப்பத்தால் தேர்தல் அதிகாரி மீது தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விஷால் புகார் அளித்து, தன்னுடைய வேட்புமனுவை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார் விஷால்.ஆனால் தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது என்று லக்கானி கூறிவிட்டார். இதனால் ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட முடியவில்லை. விஷால் வேட்புமனுவை ஏற்க கூடாது என்று ஆளும் அதிமுகதான் பிடிவாதம் காட்டியிருந்தது.
இந்த நிலையில், இன்று விஷால் கூறியுள்ளதாவது: எனது போராட்டத்தில் துணை நின்ற ரசிகர்கள், பொதுமக்கள், தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆதிக்க சக்தியினால் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டது. எனினும் என்னுடைய மக்கள் பணி தொடரும். இவ்வாறு விஷால் கூறியுள்ளார். ஆர்.கே.நகரில் ஒரு சுயேட்சைக்கு ஆதரவு அளித்து அவரை வெற்றி பெறச் செய்ய உள்ளதாக ஏற்கனவே இவர் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
Vishal taliking about his political plan. He says, political course will be decides soon.