வெயிட் கூடிட்டேயிருக்கு ... சுகர் இருக்கு என்று எதைச் சொன்னாலும் ரைஸ் சாப்பிடறத மோதோ நிறுத்துங்க என்று தான் அட்வைஸ் கிடைக்கிறது.
அரிசியை நிறுத்தி விட்டால் அதற்கு மாற்றால என்ன சாப்பிடுவது என்ற கேள்வி எழும் தானே அதற்கு அவர்களே அதற்கான மாற்றையும் சொல்வார்கள் சப்பாத்தி.... சப்பாத்தி சாப்பிடுங்க கோதுமை எவ்ளோ வேணாலும் எடுக்கலாம் அது உங்க உடம்புக்கு ரொம்ப நல்லது என்று பெரிய பாடமே எடுக்கப்படும்.
உண்மையில் கோதுமையில் சில நியூட்ரிசியன்கள் இருக்கிறது அதனை சாப்பிடுவதால் ரத்தத்தை சுத்தப்படுத்தும், செரிமானத்தை சீராக்கும், இதயத்திற்கு ஆரோக்கியமளிக்கும், வாய் துர்நாற்றத்தைப் போக்கும் என அடுக்குக் கொண்டே போகலாம்... எல்லாம் சரி அதற்காக எல்லா வேலையும் கோதுமை உணவே எடுத்துக் கொள்ள முடியுமா என்ன? சிலர் அதையும் நம்பி மூன்று வேலையும் கோதுமை உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் ஆரோக்கியமான டயட் என்றால் அதில் நிச்சயம் கோதுமை இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நமக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது. இதிலிருந்து கொஞ்சம் வெளியே வாருங்கள்.
முழு கோதுமையில் அதிகப்படியாக சர்க்கரை இருக்கிறது.சர்க்கரை நோயாளிகள் இதனை தவிர்க்க வேண்டும், ஆனால் சுகர் இருக்கு என்று சொல்லி சொல்லியே இதைச் சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.
Surprising Things Happen When You Stop Consuming Wheat