ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வாடகைக் கார் ஓட்டனும்...வீடியோ

Oneindia Tamil 2017-12-07

Views 2

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் வாடகைக் கார்களை இயக்க வேண்டும் எனவும் மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகனச்சட்டத்தை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில சாலை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிகுந்து கவலையளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு 17218 பேரும், 2017 இல் அக்டோபர் மாதம் வரை 14077 பேரும் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர்.சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் 90 விழுக்காடு சாலை விபத்துகள் ஓட்டுநர்கள் நீண்ட நேரம் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் களைப்பு மற்றும் மன உளைச்சலால் ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் சுற்றுலா பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களே அதிக விபத்துக்குள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்கும் வகையில் 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்துத் தொழிலாளர்கள் சட்டம் 1961இல் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட வரையறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக்கு கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. மோட்டர் வாகன சட்டப்படி ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கும், ஒருநாள் ஓய்வுடன் வானங்களை இயக்கவும், மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.


A tourist Vehicle drivers should work for 8 hours only per day. if they exceed this rule their license will be canceled annouced tamilnadu govt.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS