கரூரில் தாயும், மகளும் தொடர்ந்து இடைவிடாமல் 72 மணி நேரம் கை குலுக்கும் சாதனையை துவக்கியுள்ளனர் - இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக 72 மணி நேரத்தில் 5 லட்சம் முறை கை குலுக்கும் சாதனை துவக்கம்

boominews 2021-09-22

Views 1

கரூரில் தாயும், மகளும் தொடர்ந்து இடைவிடாமல் 72 மணி நேரம் கை குலுக்கும் சாதனையை துவக்கியுள்ளனர் - இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக 72 மணி நேரத்தில் 5 லட்சம் முறை கை குலுக்கும் சாதனையை துவங்கி நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் வசிப்பவர் பத்மாவதி - ஆறுமுகம் தம்பதியினர். டெக்ஸ்டைல் தொழிலாளிகளான இவர்களுக்கு ஸ்ரீ தர்ஷினி என்கின்ற 18 வயது மகள் இருக்கிறாள். அவர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தாம் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இருவர் தொடர்ந்து 43 மணி நேரம் கை குலுக்கி சாதனை செய்துள்ளதை அறிந்துள்ளனர். அதனை தொடர்ந்து அதே போன்று தானும் சாதனை செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் உருவாகியது. இதனை தனது பெற்றோரிடம் சொல்லியுள்ளார். ஆரம்பத்தில் மறுத்த அவர்கள், ஒரு கட்டத்தில் தனது மகளின் சாதனை ஆசையை நிறைவேற்ற தாய் பதமாவதியும் இணைந்து செய்ய முடிவு செய்தார். அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணி முதல் 25ம் தேதி காலை 11 மணி வரை தொடர்ந்து 72 மணி நேரம், 5 லட்சம் முறை கை குலுக்கும் சாதனை முயற்சியை தாயும், மகளும் துவக்கியுள்ளனர். ஏசியா புக் ஆப் ரெக்கார்ட் பிரதிநிதிகள் முன்னிலையில் இச்சாதனையை துவக்கியுள்ளனர். வீடியோ கேமராக்கள் மூலம் தொடர்ந்து 72 மணி நேரம் பதிவு செய்யப்பட்டும், சாதனை புத்தக பிரதிநிதிகள் முன்னிலையில் தொடர்ந்து கை குலுக்கி வருகின்றனர். 1 மணி நேரத்திற்கு 5 நிமிடம் அல்லது 2 மணி நேரற்றிற்கு ஒரு முறை 10 நிமிடம் என ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்கின்ற விதி உள்ள நிலையில் தாயும், மகளும் தங்களுக்கு ஓய்வு தேவையில்லை வேண்டாம் எனக் கூறிக் கொண்டு தொடர்ந்து கை குலுக்கலில் ஈடுபட்டு வருகின்றனர். உணவும் உண்ணாமல், இயற்கை உபாதைகளுக்காக கூட நேரத்தை ஒதுக்காமல் இச்சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS