SHE-3! பெண்களுக்கு நிகழும் அநீதி! என்று தான் கிடைக்கும் நீதி

Oneindia Tamil 2017-12-02

Views 450

சினிமா எடுப்பவர்களுக்கான சமீபத்திய ஆண்டுகளின் அடையாள வடிவம் 'குறும்படம்'. இன்றைக்கு மாற்றுக் களத்தோடு திரைக்கு அறிமுகமாகிற புது இயக்குநர்கள் குறும்படங்களால் கவனிப்புப் பெற்றவர்கள்தான். சதீஷ் குருவப்பன் இதுவரை 14 குறும்படங்கள் எடுத்திருக்கிறார். அத்தனையும் சமூக நோக்கத்தோடு எடுக்கப்பட்ட குறும்படங்கள். இவர் இயக்கிய 'Mr.Cobbler' குறும்படத்தை ஃபேஸ்புக்கில் இதுவரை 12 கோடிப்பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள். 33 லட்சம் பேர் இந்தக் குறும்படத்தை லைக் செய்திருக்கிறார்கள். 27 லட்சம் பேர் இந்த குறும்பட வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்கள். வேறு குறும்படங்களுக்காக விருதுகளையும் வென்றிருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிப் பேசும் 'SHE', எண்ணங்களே மகிழ்ச்சியைத் தீர்மானிக்கின்றன எனும் கான்செப்ட் கொண்டு எடுக்கப்பட்ட 'PHD' ஷார்ட் ஃபிலிம், சினிமா நடிகர்களுக்காக அடித்துக்கொள்ளும் ரசிகர்கள் ஒரு வன்முறைக்குப் பிறகு திருந்து வாழ்வது பற்றிய படமான 'வெறி',எல்லோரையும் நேசிக்கவேண்டும் எனும் கருத்தை வலியுறுத்துகிற 'விரும்புடா', முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் மருமகள்களைப் பற்றிய 'அன்புள்ள அப்பா' என இவரது எல்லாப் படங்களுமே நல்ல சமுதாயக் கருத்தை வலியுறுத்துகின்றன.

சதீஷ் குருவப்பன் இதுவரை 14 குறும்படங்கள் எடுத்திருக்கிறார். அத்தனையும் சமூக நோக்கத்தோடு எடுக்கப்பட்ட குறும்படங்கள்.

Mr.Cobbler குறும்படத்தை ஃபேஸ்புக்கில் இதுவரை 14 கோடிப்பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள். இந்தக் குறும்படத்தை 40 லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள் மற்றும் 30 லட்சம் பேர் இந்த வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்கள்.

சதீஷ் குருவப்பன் நடித்து இயக்கிய இத்திரைப்படம் எல்லா மனிதர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற சமூக கருத்தை கொண்டது.

The Tamil short film 'Mr.Cobbler' has created a world record. Millions of people watching, liking, and sharing on Facebook. Sathish Guruvappan who is directing the film is yet to come silver screen.

SHE Short Film Series are made to create awareness about Crime against Women. SHE abbreviated as "Stop Har@ssment Everywhere"

'Mr.Cobbler'
SHE-1
SHE-2
SHE-3

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS