முதல்ல விஸ்வரூபம் 2... கட்சி ஆரம்பிச்ச பிறகு சபாஷ் நாயுடு, இந்தியன் 2! - இது கமல் முடிவு

Filmibeat Tamil 2017-12-02

Views 6.8K

விஸ்வரூபம் 2 படம் வெளியான கையோடு அரசியல் கட்சியை அறிவிப்பார் கமல் என்று தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதில் உறுதியாக உள்ளார். எந்தத் தேதியில் தொடங்கப் போகிறார் என்பதை மட்டும் அவர் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் விஸ்வரூபம்-2 படம் வெளியானதும் அரசியலில் குதிப்பார் என்று தற்போது தகவல் கசிந்துள்ளது. 2013-ல் விஸ்வரூபம் படம் வெளியானபோதே, அதன் இரண்டாம் பாகத்தின் 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

2015-ல் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டன. இன்னும் 10 சதவீத படப்பிடிப்பு பாக்கி உள்ளது. தற்போது அந்த 10 சதவீத காட்சிகள் மட்டும் சென்னையில் படமாகி வருகிறது. ஓரிரு வாரத்தில் முழு படப்பிடிப்பையும் முடிந்துவிடும் என்கிறார்கள். அடுத்த மாதம் (ஜனவரி) 26-ந் தேதி குடியரசு தினத்தன்று படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சபாஷ்நாயுடு படத்தில் நடிப்பதாக அறிவித்து வெளிநாடுகளில் அதன் முதல் கட்ட படப்பிடிப்பையும் நடத்தி விட்டு வந்தார். அதன்பிறகு வீட்டு படிக்கட்டில் கமல்ஹாசன் தவறி விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்று போனது. ‌

Sources say that Kamal Haasan may launch his political party after the release of Viswaroopam 2

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS