2011ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சச்சின் கேட்ட டிஆர்எஸ் ரிவ்யூ ஒன்று தற்போது பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. சயீத் அஜ்மல் சச்சினை எடுத்த அந்த விக்கெட்டிற்கு முதலில் நடுவர் அவுட் கொடுத்து இருந்தார். ஆனால் ஐசிசி நடைமுறைப்படுத்திய டிஆர்எஸ் முறையின் மூலம் சச்சின் ரிவ்யூ கேட்டதால் அவுட் இல்லை என்று கூறப்பட்டது. அந்த சம்பவம் அப்போது பெரிய சர்ச்சையாக மாறியது. தற்போது அதுகுறித்து சயீத் அஜ்மல் மீண்டும் பேசியுள்ளார். அதில் சச்சின் விக்கெட் என தெரிந்தும் ஏமாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். அவர் இந்திய கிரிக்கெட் அணியின் மீதும் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
2011ல் நடந்த உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் மொஹாலியில் நடைபெற்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய அந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. 11வது ஓவர் போட வந்த சயித் அஜ்மலின் பந்தில் சச்சின் அவுட் ஆனார். அவர் எல்.பி.டபிள்யூ மூலம் அவுட் ஆனதாக அம்பயர் கூறினார். இந்திய அணியின் இரண்டாவது விக்கெட்டும் விழுந்த காரணத்தால் பாகிஸ்தான் கொண்டாட்டத்தில் இருந்தது.
Saeed Ajmal opens up Sachin's 2011 World Cup controversy wicket. Saeed still believes that Sachin has got out and given wrong 'not out' by review.