காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் மரணம் அடைந்து இருக்கிறார். உயிரிழந்த ஏ.சுரேஷ் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர். காஷ்மீர் எல்லை பகுதியில் எப்போதும் போல நேற்று இரவு எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாகிஸ்தான் ராணுவம் திடீர் என்று துப்பாக்கி சூடு நடத்தியது.
காஷ்மீர் அருகே இருக்கும் ஆர்.எஸ் புரா செக்டார் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. திடீர் என்று இந்த தாக்குதல் நடந்த காரணத்தால் ராணுவ வீரர்கள் நிலைகுலைந்து போனார்கள்.
இதில் பாகிஸ்தான் வீரர்கள் நிறைய ஏறி குண்டுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஏ. சுரேஷ் பரிதாபமாக மரணம் அடைந்தார். இந்த இந்திய ராணுவத்தில் 1995ல் சேர்ந்தவர். ராணுவத்தின் பாதுகாப்பு படையின் 78வது பிரிவில் இவர் பணியாற்றி வந்தார.
Tamilnadu army man A. Suresh died in Kashmir border. He is 78 battalion commando. He joined in Indian army on 1995.