மோகன்லாலிடம் திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்ட விஷால்: காரணம்...வீடியோ

Filmibeat Tamil 2017-11-28

Views 1

விஷால் மலையாள நடிகர் மோகன்லாலிடம் திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்டுள்ளார். கோலிவுட், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று பிசியாக இருக்கும் விஷால் அண்மையில் மலையாள திரையுலகம் பக்கமும் சென்று வந்தார். நான் மோகன்லாலின் குடும்பத்தில் ஒருவனாக உணர்ந்தேன். அவரும், அவரது குடும்பத்தாரும் மிகவும் அன்பாக பார்த்துக் கொண்டனர். அதை ஒருபோதும் மறக்க மாட்டேன். கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் வந்த ஆக்ஷன் காட்சியில் நடிப்பது சவாலாக இருந்தது. அந்த காட்சியில் நடித்த நாளை மறக்கவே முடியாது. லால் சாரும், நானும் நேருக்கு நேர் மோத வேண்டும். என் இதயத்துடிப்பு வேகமாக இருந்தது. இந்த காட்சியை முடித்துவிட்டு ஓடிப் போய் கேரவனில் உட்கார வேண்டும் என்று இருந்தது. மோகன்லால் கண்ணை பார்த்து வசனம் பேசியது கஷ்டமாக இருந்தது. எத்தனையோ படங்களில் நடித்தும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. கிளைமாக்ஸ் காட்சியில் மோகன்லாலை அடித்ததற்காக அவரிடம் சாரி சாரி என்று பல முறை சொன்னேன் என்றார் விஷால்.


Vishal said that he will never forget his Mollywood outing Villain with Mohanlal. He felt like a newcomer while acting with Mohanlal. His heartbeat was fast and he was sweating while acting with Mohanlal in the climax scene.


Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS