உயிரினங்களும், மனிதனும் குன்னி குளிர்வது டிசம்பரில் தான்…
மரங்களும் செடிகளும் பூத்துக்குளுங்கும் மாதமும் டிசம்பரில் தான். பூத்து குளுங்கும் மலர்களுக்கு நடுவில் கொத்து கொத்தாய் மனித உயிர்கள் மடியும் மாதமாக மாறி விட்டது இம்மாதம்.
கால சக்கரத்தை மெல்ல சுழற்றினால் காலன் கொண்டு சென்ற பலி எண்ணிக்கை எண்ணிலடங்காது. கடந்த 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தமிழகத்தில் சுனாமி ஆழிபேரலை உருவாகி சில மணி துளிகளில் பல ஆயிரக்கணக்கான உயிர்களை கடல்தாய் ஆர்பரித்து கொண்டாள் . பல அடி உயரம் எழுந்த அலைகளை பார்த்து சிலையாகி போனவர்கள் அப்படியே போய் விட்டனர். ஆழி பேரலை கோரத்தாண்டவம் ஆடிய போது அது கண்ணிற்கு குழந்தைகள் ,பெரியவர்கள் என்பது தெரியாமல் அப்படியே வாரி சுருட்டி தனக்கு சொந்தமாக்கி கொண்டது. இந்த நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் இன்றுவரை மீளவே இல்லை என்பது தான் நிஜம்.
கடல்தாயின் ஆக்ரோஷ தாண்டவம் முடிந்த அடுத்த ஆண்டான 2005 டிசம்பர் மாதம் வருணபகவானும் பதிலுக்கு ஆட்டம் போட்டார் .பெய்த மழை பெய்தபடியே இருக்க ஏற்பட்ட வெள்ளபெருக்கில் முக்கிய நகரங்களான சென்னை , திருச்சி , நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது . இருக்க இடம் உண்ண உணவு இன்றி மக்கள் பெரும் துயறருக்கு ஆளாகினார்கள்.
இருவரும் ஆட்டம் போட்டு நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி தன் பசியை தீர்த்துகொண்டனர்.
2015ஆம் ஆண்டு வருணபகவானுக்கு மீண்டும் பசி ஏற்பட எல்நினோ புயலை கிளப்பிவிட்டார். கெத்து என்று காலரை தூக்கிகொண்டு வலம் வந்த சென்னை வாசிகள் எல்நினோ புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி சின்னாபின்னமாகினர். சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் எத்தனை ஆறுகள் ஓடியது என்பது அப்போது தான் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட எண்ணற்றவர்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து உணவுக்கே திண்டாட வைத்தது வருணபகவானின் கோரத்தாண்டவம்.
இயற்கையின் கோர தாண்டவ பசி ஒருபுறம் இருந்தாலும் எமதர்மன் வீசிய பாச கயிற்றில் அரசியல் தலைவர்கள் பலர் சிக்கி தன் உயிரை இழந்த சம்பவங்களும் அதனால் தமிழக மக்கள் பாதிப்படைந்த சம்பவங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
1972ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவரும் அனைவராலும் ராஜாஜி என்று அழைக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரியாரி மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார்.
பழுத்த பழம் , பகுத்தறிவு தந்தை என்று போற்றப்பட்டு வந்த திராவிட கழகத்தின் ஆணிவேரான பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்வர் மாதம் 24 ஆம் தேதி காலமானார்.
மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செல்வர் என்று தமிழகத்தின் கடைகோடி மக்களால் நேசிக்கபட்ட எம்ஜி ஆர் என்று அழைக்கபடும் அதிமுகவின் தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம் ஜி ராமச்சந்திரன் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி மறைந்தார் . அவரது மறைவு தமிழக மக்கள் மனிதிலும் தமிழக அரசியலிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது எல்லாம் இருக்க கடந்த வருடம் இதே டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தமிழகத்தின் இரும்பு மனுசி என்றும் தமிழக அரசியல்வாதிகளை தனது கைக்குள் அடக்கி ஆண்டு வந்த செல்லி ஜெ ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இப்படி அடுக்கடுக்காக டிசம்பர் மாதம் இயற்கை ஒரு புறம் கோரத்தாண்டவதை ஆடி பல உயிர்களை காவு வாங்கியும் அரசியல் தலைவர்கள் எமனின் பாச கயிற்றில் சிக்கிய சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தவண்ணம் உள்ளது.
திக் திக் திகிலுட்டம் டிசம்பர் மாதம் பிறக்க இன்னும் 3 நாட்கள் தான் உள்ளன . இந்த வருட டிசம்பர் மாதம் பாதிப்புகளை ஏற்படுத்தப்போவது இயற்கையா எமனின் பாசக்கயிறா . பொறுத்திருந்து பாப்போம்…