இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை இன்று தொடர்கிறது. இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பவுலிங் அபாரமாக இருந்தது. இஷாந்த் சர்மா, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள்.
அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் எடுத்தது. அதன்பின் களம் இறங்கிய இந்தியா அணி பேட்டிங்கிலும் மாஸ் காட்டியது. இரண்டாவது நாள் மூன்றாவது நாள் போட்டியை இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் வசம் வைத்து இருந்தனர். முரளி விஜய் அதிரடியாக ஆடி 128 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். புஜாரா 143 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
Second test match between India vs Sri lanka held today in Nagpur. Sri lanka won the toss and choose to bat first. Sri lanka got 205 runs for 10 wickets in their first innings. India got 610 runs for 6 wickets in their first innings