உலகமே என் காலடியில் கிடந்தது.. பின் எல்லாம் தலைகீழானது..தாதா கங்குலி- வீடியோ

Oneindia Tamil 2017-11-24

Views 8.3K

தன் கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியதில் இருந்து அணியை விட்டு விலகியது வரை பல சம்பவங்களை பற்றி இவர் அதில் பேசியுள்ளார். கேப்டனாக இருந்த போது உலகமே தன்னை மதித்ததாக அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அணியைவிட்டு நீங்கிய பின் உலகம் தன்னை எப்படி ஏளனமாக பார்த்தது என்றும் பேசியுள்ளார். அதேபோல் அவருக்கு கஷ்டமான சூழ்நிலையில் முக்கியமான அறிவுரை கூறிய ஒரு கிரிக்கெட் பிளேயர் குறித்த சுவையான நினைவு ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறார்.

இந்திய அணியின் 'தாதா' முன்னாள் கேப்டன் கங்குலி 2005 செப்டம்பர் மாதம் திடீர் என்று ஒருநாள் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அவருக்கு பதில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் இரண்டு வருடம் கழித்து 2007 ஜனவரியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மிகவும் சிறப்பாக விளையாடி வந்த போதே இந்த அணியில் இருந்து 2008ல் ஓய்வு பெற்றார்.

இந்தநிலையில் தன்னுடைய கேபிடென்சி பறிபோனது குறித்து கங்குலி பேசி இருக்கிறார். அதில் ''இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது மொத்த உலகமே என் காலடியில் இருந்தது. ஆனால் ஒருநாள் திடீர் என்று நான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். எந்த கேப்டனுக்கும் அப்படி ஒரு சூழ்நிலை வந்தது இல்லை. ஆனால் அந்த நிகழ்வுதான் என்னை முழு மனிதனாக மாற்றியது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Sourav Ganguly talks about his retirement and cricket experiences in an interview. He said getting dropped from the Indian team made him a "better person".

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS