தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தொழிலதிபராக இருப்பவர் பொள்ளிராஜ். இவருக்கு சொந்தமாக எஸ்டேட்கள் மற்றும் பள்ளிகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பள்ளியை கடன் பிரச்சணையால் விற்றுள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவருக்கு கடன் பிரச்சணை இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பொள்ளிராஜ் நேற்று அதிகாலையில் வாக்கிங் சென்று விட்டு வீட்டிற்கு வந்து தனது அறையில் இருந்த கைதுப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Des : Police have filed a suit to investigate the suicide of a businessman and commit suicide