நடிகர் கமலுக்கு எச். ராஜா எச்சரிக்கை- வீடியோ

Oneindia Tamil 2017-11-23

Views 48

நடிகர் கமலஹாசன் போன்றவர்கள் பொது வாழ்க்கை வந்தால் தமிழகத்தில் பெரும்பான்மையான சமூகத்தினர் கவுரவமாக வாழ முடியாது என்று எச். ராஜா கூறியுள்ளார்.

சிவகங்கையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கும் பாஜகவிற்கும் மத்திய அரசுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்றார். பெண்கள் உடன் கட்டை ஏறுவது முஸ்லிம் படையெடுப்பாளர்கள் வந்த பின்னர் தான் என்றும் அதற்கு முன்னர் இந்து சமயத்தில் உடன் கட்டை ஏறும் பழக்கம் இல்லை என்றார். பத்மாவதி திரைப்படத்தை வரவேற்பதாக கூறிவருபவர்களை தான் கண்டிப்பதாகவும் அவர் கூறினார். கடந்த 2016ம் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னரும் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னரும் தமிழக அரசு முறையாக செயல்பட வில்லை என்று எச். ராஜா தெரிவித்தார்.

Des : If the actor Kamal Hassan comes to public life, most of the people in Tamil Nadu can not live up to H. Raja has said

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS