நானும் ரஞ்சித்தும் இந்த சமூகத்துக்குச் செய்ய நிறைய உள்ளன! - இயக்குநர் கோபி நயினார்..வீடியோ

Filmibeat Tamil 2017-11-15

Views 3.3K

நானும் இயக்குநர் பா ரஞ்சித்தும் இந்த சமூகத்துக்குச் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. நாங்கள் ஒருமித்துச் செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என்று அறம் இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படம்தான் இப்போது சமூகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதே நேரம், கோபி நயினாருக்கு ஆதரவாகப் பேசுவதாகக் கூறிக் கொண்டு, இயக்குநர் ரஞ்சித்தை சிலர் விமர்சித்து வருகின்றனர். அவர் இயக்கிய மெட்ராஸ் படத்தின் கதை கோபி நயினார் இயக்கவிருந்த கருப்பர் நகரம் கதைதான் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் கோபி நயினார் எந்த இடத்திலும் அப்படி உரிமை கோரியதில்லை. கத்தி படத்தின் கதைதான் தன்னுடையது என்று கூறி வழக்குத் தொடர்ந்தார். இந்த நிலையில் தேவையின்றி ரஞ்சித் ஆதரவாளர்கள், கோபி ஆதரவாளர்கள் என பிரிந்து நின்று கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளனர், சமூக வலைத் தளங்களில்.

Aramm movie director Gopi Nayinar gave an exlanation on a 'rift' created by social media, between him and director Ranjith

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS