ஜல்லிக்கட்டு புகழ் மாயழகு போலீஸ் மீது நடவடிக்கை!..வீடியோ

Oneindia Tamil 2017-11-14

Views 2

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள் மத்தியில் காக்கி உடையணிந்து வந்து ஆதரவுக்குரல் கொடுத்த காவலர் மாயழகு மீது துறை ரீதியான நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் மாணவர்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி நடத்திய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம். சென்னை மெரினா கடற்கரையில் பலதரப்பட்ட மக்களும் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று ஒரே குரலில் ஓங்கி ஒலித்தனர். இந்த போராட்டத்தின் போது சகோதரத்துவம், இளைய சமுதாயத்தின் ஒழுக்கம் என அனைத்துமே அனைவராலும் பாராட்டு பெற்றது. ஜாதி, மதங்களை மறந்து தமிழர் என்ற ஒற்றை அடையாளத்துடன் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை அளித்தனர்.

இதே போன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாற்று உடையில் பங்கேற்று தனது பங்களிப்பை அளித்தார் காவலர் மாயழகு. அடுத்த நாளே தான் சீருடையில் இருப்பதையும் மறந்து காக்கி உடையிலேயே வந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் தானும் பங்கேற்பதாகத் தெரிவித்தார்.

மாயழகின் இந்த பேச்சு மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்தது. இதே போன்று மாயழகு வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மாணவர்கள் ஆதரவளிக்கும் வகையில் அனைவரின் அபிமானத்தையும் பெற்றார் அந்த போலீஸ்காரர்.

English summary Department vice action against Inspector Mayazhagu who participated in Jallikattu support protest and it further adds upto the investigation over no salary or posting increment.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS