வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஜெயாடிவி சிஇஓ விவேக் செய்தியாளர்களை மழையிலேயே நிற்க வைத்து பேட்டி கொடுத்தார். சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் குடும்பத்தினர் வீட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது. சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் சிஇஓவுமான விவேக் ஜெயராமனை குறி வைத்தே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. 27 வயதான விவேக் எப்படி பல்லாயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்? அவருக்கு எப்படி பணம் வந்தது என்ற ரீதியில் அவரை சென்டர் பாயின்ட்டாக வைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நேற்று நிறைவடைந்ததை அடுத்து விவேக் விசாரணைக்காக நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை வாங்கியது குறித்து கேள்வி எழுப்பிய வருமான வரித்துறை அதிகாரிகள் 10 மணிக்கு மேல் அவரை வீட்டிற்கு அனுப்பினர்
இந்நிலையில் சென்னையில் விவேக் ஜெயராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டு குறித்தும் அதிகாரிகளின் விசாரணை குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
Jaya TV CEO Vivek Jayaraman met press today. He did not allow press people inside of even his compound.