தேர்வு சமயங்களில் காப்பியடிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட நவீன காப்பி அடிக்கும் பரீட்டை அட்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்திலும் நவீனமயத்தை நோக்கி இந்த உலகம் செல்கிறது. செங்கல் போன்றிருந்த போன்களில் இருந்து தற்போது வாட்ச் வடிவத்திலான போன் வரை அனைத்திலும் புதுமை புகுந்து விட்டது.
இவற்றை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்காகவே விஞ்ஞானிகள் இரவும் பகலும் பாடுபட்டு கண்டறிகின்றனர். ஆனால் சிலர் அந்த டெக்னாலஜியை கொண்டு "கேப்மாறி"த்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். நவீன டெக்னாலஜிகளை கொண்டு காப்பியடிப்பதை சினிமாக்களில் பார்த்துள்ளோம். புத்தகத்தை வைத்து காப்பியடிப்பது, துண்டுச்சீட்டு வைத்து காப்பியடிப்பது, ஆள்மாறாட்டம் செய்வது முதல் ப்ளூடூத் மூலம் காப்பியடிப்பது வரை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.
Writing pad with a new technology invented for copying in the exam. A video shows how the technology works.