ரூ.1000 கோடி சர்ச்சைக்குள்ளான சசிகலாவின் ஜாஸ்.. அங்கும் ஐடி ரெய்டு!- வீடியோ

Oneindia Tamil 2017-11-09

Views 2.4K

சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு சொந்தமான சுமார் 190 இடங்களில் இன்று ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
சென்னை, பெங்களூரு, மன்னார்குடி, டெல்லி, கர்நாடகா தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுக்கொண்டுள்ளது.
அதேபோல, வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனவேளச்சேரியில் ஃபினிக்ஸ் மாலில் உள்ள 11 திரையரங்குகளை, முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ரூ.1000 கோடிக்கு வாங்கியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், திரையரங்குகளை வாங்கியிருந்தால் எத்தனை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டன? அந்தப் பணம் எங்கிருந்து, எதன் மூலம் கிடைத்தது? அந்தத் திரையரங்குகள் மிரட்டி வாங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு உண்மையா? அந்தத் திரையரங்கங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் திட்டமிட்டுத் தாமதப்படுத்தப்பட்டனவா?


IT raids take place at Jazz cinemas places at Velacherry in Chennai.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS