தம்முடைய உதவியாளர் ஜனா வீட்டிலும் கூட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றிருக்கிறார்களே என ரொம்பவே பதறிப் போனார் தினகரன். இப்படி உதறலோடு கரிசனம் காட்டும் ஜனா என்கிற பொறியை வைத்துதான் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டார் தினகரன். ஜெயா டிவியில் எம்.டி.யாக இருப்பவர்களுக்கு பி.ஏ.வாக இருந்தவர் ஜனா. பின்னர் மெல்ல மெல்ல சசிகலா குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவராக மாறினார்.குறிப்பாக தினகரன் குடும்பத்தில் ஐக்கியமாகிவிட்டார் ஜனா. அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜனா மூலமே நிறைய ‘காரியங்களும்' சாதித்து கொள்ளப்பட்டன.இதனால் சாலிகிராமம் பக்கம் ஜனா பெயரை கேட்டாலே பிரபலங்கல் ரொம்பவே ஆடிப் போய்விடுவார்கள். இந்த ஜனாவை வைத்துதான் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் சிறைக்குப் போகவும் நேரிட்டது.
A team of income tax officials today morning began raids at TTV Dinakaran Jana's House also