கருணாநிதியை பிரதமர் மோடி திடீரென சந்திப்பது ஏன்? பரபர பின்னணி- வீடியோ

Oneindia Tamil 2017-11-06

Views 95

சென்னை வருகை தந்துள்ள பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை திடீரென சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மத்திய அரசுக்கு எதிராக திமுக சற்றே அடக்கி வாசித்தது. ஒருகட்டத்தில் பாஜகவை பகிரங்கமாகவே திமுக எதிர்க்கத் தொடங்கியது.
கருணாநிதியின் சட்டசபை வைரவிழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை பங்கேற்க வைத்து பாஜகவுக்கு எதிரான பிரமாண்ட கூட்டணிக்கும் திமுக அடித்தளம் போட்டு வைத்தது. இந்த நிலையில் கருணாநிதி உடல்நலம் தேறி முரசொலி அலுவலகம் சென்றார்.பின்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் சென்னை வந்துள்ள பிரதமர் மோடி இன்று திடீரென கருணாநிதியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

According to the sources DMK President Karunanidhi Family members set a lobby for Prime Minister Modi's meeting with Karunanidhi.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS