சென்னையில் தினத்தந்தியின் பவள விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்திக்கிறார். இரு முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.
சென்னையின் எம்ஆர்சி நகரில் நடைபெற உள்ள திருமண விழாவில் இன்று காலை அவர் பங்கு பெறுவார் என கூறப்படுகிறது. அந்த நிகழ்வை முடித்துவிட்டு அவர் தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் கலந்து கொள்வார். இதற்காக மோடி டெல்லியில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். காலை 9.55 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அவர் வந்தடைகிறார்.
சென்னையின் எம்ஆர்சி நகரில் நடைபெற உள்ள திருமண விழாவில் இன்று காலை அவர் பங்கு பெறுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் மோடி இன்று நண்பகல் 12.30 மணிக்கு சந்திக்கவுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
PM Narendra Modi meets DMK Chief Karunanidhi in Gopalapuram house by 12.30 noon.