தமிழக அரசியல் பாதையையே மாற்றிப்போட்ட கமல்...வீடியோ

Oneindia Tamil 2017-11-04

Views 11.8K

நடிகர் கமல்ஹாசன், தமிழகத்தில் வேறு ஒரு வகை அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார். இதற்கு அரசியல் என்ற பெயரை விட சமூக மாற்றத்திற்கான புரட்சி என்பது சரியான வார்த்தையாக இருக்கும். "அரசியலுக்கு எப்போது வருவீர்கள் கமல்.." என்று நிருபர்கள் கேட்டபோது, "நான் வாக்களிக்க ஆரம்பித்தது முதலே அரசியலில்தான் இருக்கிறேன்" என்று பதில் வந்தபோதே, 'இவரு வேற மாதிரி' என்பது பலருக்கும் புரிந்துவிட்டது. அரசியல் என்றால், கட்சியும், கறை வேட்டியும்தான் என்ற யூனிபார்ம் சிஸ்டத்தை உடைத்து, மக்களுக்கு ஏற்ப மாற்றத்தை கொண்டுவர தொடங்கியுள்ளார் கமல் என்பதே அவரது சமீபத்திய நடவடிக்கைகள் சொல்லும் பாடம்.
எந்த விஷயமாக இருந்தாலும், முதலில் மனதில் ஏற வேண்டும். டிவிட்டர் மூலமும், பேட்டிகள் மூலமும் அதைச் செய்தார் கமல். பிறகு களத்திற்கும் புறப்பட்டார். எண்ணூரில் அவர் அதிகாலையில் ஆய்வு செய்வார் என்பதை உளவுத்துறையே கணித்திருக்காது. இது ஏதோ அரசியல்வாதிகள் நடத்தும் ஒப்புக்கு, சப்பான ஆய்வு கிடையாது.

Kamal Haasan no need to float a new party, s he is doing a change over politics already.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS