ஒரு மணி நேரமாக முடங்கிய வாட்ஸ்அப்.. பதைத்து போன நெட்டிசன்கள்!- வீடியோ

Oneindia Tamil 2017-11-03

Views 2

பிரபலமான அப்ளிகேஷனான வாட்சப் தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடிரென்று வேலை செய்யாமல் செயல் இழந்து போனது. இந்தியா மற்றும் சில நாடுகளில் வாட்சப் திடீரென்று வேலை செய்யாமல் நின்று போனது . பலரும் இது குறித்து பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது வைரல் ஆகியிருக்கிறது.மேலும் சரியாக ஒரு மணி நேரத்திற்கு பின் தற்போது மீண்டும் வேலை செய்ய தொடங்கி இருக்கிறது. தற்போது வாட்சப் வேலை செய்யாமல் போனதிற்கான காரணம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வாட்சப்பில் வேலை செய்யும் நபர் ஒருவர் விளக்கம் அளித்து இருக்கிறார். இதற்கு பின்பு நிறைய திட்டங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.இன்று மதியம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென்று வாட்சப் அப்ளிகேஷன் வேலை செய்யாமல் நின்று போனது. அதன்படி நாம் அனுப்பும் மெசஜ்கள் யாருக்கும் செல்லாமல், பிறர் அனுப்பும் மெசஜ்கள் நமக்கு வராமல் இருந்திருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சிலருக்கு வாட்சப் ஓபன் செய்ததும் 'கனெக்டிங்' என்ற வார்த்தை மட்டும் வந்து இருக்கிறது. அதன்படி இந்தியா, சிங்கப்பூர் , ஐரோப்பா, வியட்நாம், ஈராக் ஆகிய நாடுகளில் வாட்சப் செயல் இழந்து இருக்கிறது.

WhatsApp application has went down today in many countries like India and Singapore. People were unable to send messages to one another as the service continued to say ‘connecting’ with the wheel of death showing for most people.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS