பிரச்சனையில் ரஜினியின் 'காலா'- வீடியோ

Filmibeat Tamil 2017-11-01

Views 2.3K

'காலா' படத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
கபாலி படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் கேங்ஸ்டர் படம் காலா. மும்பையில் வாழ்ந்த தமிழர் ஒருவரின் வாழ்க்கையைத் தழுவி இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.இந்நிலையில் ராஜசேகரன் என்பவர், 'காலா' படத்தின் மூலக்கரு மற்றும் தலைப்பு என்னுடையது, ரஜினி நடிக்கும் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், ரஞ்சித் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் 'காலா' படத்தின் கதை யாரிடமிருந்தும் திருடப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

Chennai judicial court dismissed the 'Kaala' case, has directed the petitioner to approach the High Court because of this case contains copy-right issue.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS