வானிலை ஆய்வு மையம் வார்னிங்! -வீடியோ

Oneindia Tamil 2017-10-30

Views 3

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சற்று தாமதமாக ஒரு வாரம் கழித்து தொடங்கியுள்ளது. இருப்பினும் வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவிலேயே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.வங்கக்கடலின் தென்மேற்கில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. அதனால் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Heavy to very heavy rain very likely at isolated places over coastal Tamilnadu & Pudducherry; heavy over interior Tamilnadu. heavy rain will contiue in chennai Puducherry till November 3rd.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS