அதிக மதிப்புள்ள டாப் 10 விளையாட்டு வீரர்கள் இவர்கள் தான்-வீடியோ

Oneindia Tamil 2017-10-26

Views 4.6K

அதிக விளம்பர மதிப்புள்ள விளையாட்டு வீரர்கள் தொடர்பாக 'போர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியைவிட, விராட் கோஹ்லி முன்னிலை பெற்று அசத்தியுள்ளார். விராட் கோஹ்லியை விளம்பர நிறுவனங்கள் மொய்ப்பதற்கு காரணம், அவரின் ஆட்டத்திறன் மட்டும் கிடையாது. அவரது செம ஃபிட்னசும் ஒரு காரணம். இதனால் ஹெல்த் ட்ரிங்ஸ் விளம்பர நிறுவனங்களும், அழகு சாதன நிறுவனங்களும் கூட கோஹ்லியை துரத்துகின்றன. கிரிக்கெட் துறையில், தற்போதைக்கு உலகின் மிக முக்கியமான ஒரு வீரரும் விராட் கோஹ்லிதான். வீரர்களின் சம்பளம், போனஸ் மற்றும் சொந்த முதலீடுகளை தவிர்த்துவிட்டு, மார்க்கெட் நிலவரத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் அதிக வருவாய் பெறும் விளையாட்டு வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்தியாவை பொறுத்தளவில் சச்சின் டெண்டுல்கர் எப்போதுமே இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்துவார். ஆனால் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடத்தை கோஹ்லி பிடித்துள்ளார்.

India captain Virat Kohli In a sense, Kohli's popularity and power has been captured in the latest list of the world's most valuable athletes released by Forbes on Wednesday.

Share This Video


Download

  
Report form