சினிமாவில் இருப்பவர்கள் மது, புகை, மாதுக்கு அடிமையாகக் கூடாது என்று நடிகர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய பிரபலங்களின் கட்டுரைகளை 'சகலகலா வல்லபன்' என்ற பெயரில் தொகுத்துள்ளார் அவரிடம் உதவி ஆசிரியராகப் பணியாற்றி அருள் செல்வன் என்பவர். இந்த நூலை நடிகர் சிவகுமார் வெளியிட இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
விழாவில் சிவகுமார் பேசுகையில், "எஸ்எஸ் வாசன், எம்ஜிஆர், சிவாஜி போன்ற மேதைகளின் ஆரம்ப கால வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள உதவியது பேசும் படம் பத்திரிகை. அந்தப் பத்திரிகையில்தான் எம்ஜி வல்லபன் பணியாற்றினார். அப்போதெல்லாம் நான் சிரமப்பட்ட போது இரண்டு வெள்ளை சட்டைதான் வைத்திருப்பேன். இரண்டு வெள்ளை சட்டை வைத்துக் கொண்டு தினமும் ஒயிட் அண்ட் ஒயிட்டில் வருபவர் இவர் என்று பேச வைத்தேன். என்னை மாதம் இரண்டு ஓவியங்கள் சிவாஜி, எம்.ஜி.ஆர். பத்மினி, சாவித்ரி என்று வரைய வைத்து 24 ஓவியங்களை பேசும் படத்தில் வெளியிட்டார் வல்லபன்.
Actor Sivakumar has advised film artists not to consume liquor, cigarette