நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதை ஜனவரி 25 அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். அந்தப்படத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும், இஸ்லாம் மதத்தையும் இழிவுபடுத்தி காட்சிகள் அமைந்துள்ளதாக செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேற்று (21.01.2013) அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு கமலஹாஸன் விஸ்வரூபம் திரைப்படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்தப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனவே இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு முற்றாகத் தடை விதிக்க வேண்டும்
அவ்வாறின்றி இப்படம் வெளியாகுமேயானால்,அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட விடமாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவசர நிர்வாகக் குழு கூடி முடிவெடுத்துள்ளது