மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தெவஸ்தான மாசிமக மஹோற்சவ திருவிழாவை முன்னிட்டு இன்று காலை மாத்தளை சுடுகங்கை ஸ்ரீ ஏழுமுக காளியம்மன் கோயிலிலிருந்து அடியார்கள் கற்பூரச் சட்டி ஏந்தியும், பரவைக்காவடி ஊர்வாலமும் நடைபவனியாக மாத்தளை நகர்வலம் இடம்பெற்று தேவஸ்தானத்தை வந்தடைந்ததும் தீமிதிப்பு நிகழ்வு பக்திபூர்வமாக நடைபெற்றது, இந்நிகழ்வுகளில் பெருமளவிலான அடியார்கள் கலந்துகொண்டனர்