Hero Karizma XMR 210 Tamil Review by Ghosty. ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக், ரூ.1.73 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் முதன் முதலில் அறிமுகமாகும்போதே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதன் பிறகு கரீஷ்மா போன்ற பைக்கை ஹீரோ களம் இறக்கவேயில்லை. ஆனால் ஹீரோ நிறுவனம் தற்போது கரீஷ்மா பைக்கை அப்டேட் செய்து ஸ்போட்டியராகவும், சிறப்பான டிசைன் உடனும் வெளியிட்டுள்ளது. இந்தியர்களுக்கான சிறந்த பைக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சீட்டிங் பொசிஷனும் இந்தியர்கள் விரும்பும் வகையில் உள்ளது. இந்த பைக் குறித்த தகவல்களை இந்த வீடியோவில் காணுங்கள்.
~ED.157~