நவீன வாழ்வியல் கோளாறுகளில் ஒன்றாக தூக்கம் இன்மை என்பது அதிகரித்து வருகிறது. தூக்கம் தொலைத்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை புரியும். இந்த தூக்கமின்மையை இயற்கை வழியில் போக்குவதற்கான வழி வகைகளை இங்கே பார்க்க இருக்கிறோம்.
‘யோக நித்திரை’ என்பதையும் பழகலாம். கரோனா காலத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்களால் அதிகம் பரிந்துரை செய்யப்பட்டது உத்தி இதுவாகும். ஆழ்மனதின் அழுத்தங்களை களையும் இந்த யோக நித்திரையை உரிய முறையில் பழகினாலும் எளிதில் தூக்கம் பிடிபடும். தூக்கம் தொலைத்தவர்கள் என்றிலாது, சகலமானோருக்கும் மனதை அழுத்தும் சஞ்சலங்களில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த உறக்கத்தை பழக யோக நித்திரை உதவும். இதனை பழகியவர்களுக்கு போதிய அளவில் உடல் மனம் தளர்வடைவதோடு, மனம் ஒருமுகப்படுவது, நினைவுத்திறன் மேம்படுவது, சுறுசுறுப்பாக இருப்பது ஆகியவை சாத்தியமாகும்.
Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram.com/kamadenuTamill